Tamil SnehamTAMIL SNEHAM - COVID-19 RELIEF

கொரோனா நிவாரண நிதி

அன்புடையீர், வணக்கம். கொரோனாத் தொற்று போல் ஒரு பேரிடரை எதிர்கொள்வோம் என்று உலகமக்களில் ஒருவர்கூட கற்பனை செய்திருக்கமாட்டார்கள். உலகின் ஒரு மூலையில் உள்ள சின்ன நகரில் சிலமாதங்களுக்கு முன் தோன்றிய இந்தத் தொற்று, இன்று உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய உயிர்ச் சேதத்தையும், பொருளாதாரப் பேரழிவையும் உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நோய்க்கு தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், சமூக விலகல் மட்டுமே ஒரே தீர்வு என்பதனால் பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கின்றனர். தொழில்கள் முடங்கி, உற்பத்தி குறைந்து நேரக்கூலி, தினக்கூலி வாங்கும் பல எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள், தமது அன்றாட அடிப்படைத் தேவைகளுக்கே வழியில்லாமல், எங்கிருந்தாவது உதவிகள் கிடைக்குமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தருணத்தில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் நமது முகமறியா உறவுகளுக்கு உதவிடவேண்டும் என்பது 'தமிழ் சிநேகம்' முன்பாக இருக்கும் ஆகப்பெரிய பொறுப்பு.

கடந்த காலங்களில் அன்பர்கள் உங்களோடு கரம் சேர்த்து 'தமிழ் சிநேகம்' முன்னெடுத்து திருப்திகரமாக முடித்து வைத்த சமூக மற்றும் நிவாரணப் பணிகள் பல உண்டு. முன்பு செய்தது போலவே, இந்தக் கொரோனாத் தொற்று காலத்தில் அல்லல்படும் மக்களுக்கு நேரடியாக உதவிகள் சென்று சேரும் வண்ணம் 'தமிழ் சிநேகம்' செயற்குழு நிவாரணப் பணிகளைத் திட்டமிட்டு வருகிறது. இந்த அரும்பணியில் அன்பர்கள் அனைவரும் முழுமனதுடன் பங்கெடுத்து தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்க வேண்டுமென்று 'தமிழ் சிநேகம்' உங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது.

"தமிழால் இணைவோம் .... நம் உறவுகளின் துயர் துடைப்போம்!"

அன்புடன்
தமிழ் சிநேகம்

OUR WORK

What we've done for people

Sneham team involved in relief efforts
Sneham team involved in relief efforts
Sneham team involved in relief efforts
Sneham team involved in relief efforts
Sneham team involved in relief efforts
Sneham team involved in relief efforts
Sneham team involved in relief efforts
Sneham team involved in relief efforts
×

CONTACT

Lets get in touch. Send us a message. Contact us for help

Tampa, FL

Phone: 813 731 0144

Email: contact@tamilsneham.org